முகப்பு
ஈரோடு

கொங்கு பொறியியல் கல்லூரியுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் கட்டடவியல் துறையில், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் கட்டடவியல் துறையில், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், பிரதேசப் புவியியல் அலுவலர்களுடன் இணைந்து சமூதாய பொறுப்புடமையை மிகைப்படுத்துவதாகும். மேலும், பல்வேறு சிறப்பம்சங்களாக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு, அனுபவத்தை பெறுவதற்கான தொழிற்சார்ந்த பயிற்சி, மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கு ஏதுவாக நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறையில் பயன்படுத்தப்படும் சமீபத்திய தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களை அறிந்து அதை தங்களுடைய ஆராய்ச்சிக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்த சாதகமாகவும் அமைந்துள்ளது. 

எனவே, இந்த ஒப்பந்தம் கல்லூரிக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை துறைக்கும் ஒரு பாலமாக அமையும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாலுசாமி, தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டப்பணி மேலாளர் வரதராஜன், ஐஐபிசி தலைவர் முனைவர் சத்தியமூர்த்தி, துறை தலைவர் முனைவர் கோதை மற்றும் உதவி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →