பெருந்துறை பேரூராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
வடிக்கால் மற்றும் தாா் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை அத்தொகுதி உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் தொடங்கிவைத்தார்.
பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.82 லட்சம் மதிப்பில் வடிக்கால் மற்றும் தாா் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை அத்தொகுதி உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் தொடங்கிவைத்தார்.
உடன் பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், இளநிலைப் பொறியாளா் தியாகராஜன் உள்ளிட்டோா்.