விவசாய கிணற்றில் மண்ணுளிப் பாம்பு மீட்பு
சத்தியமங்கலம் அருகே விவசாய கிணற்றில் உயிருக்குப் போராடிய மண்ணுளிப் பாம்பை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
சத்தியமங்கலம் அருகே விவசாய கிணற்றில் உயிருக்குப் போராடிய மண்ணுளிப் பாம்பை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கோணமூலை வெள்ளமேடு தோட்டத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது தோட்டத்து கிணற்றில் உள்ள படிக்கட்டில் மண்ணுளிப் பாம்பு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பாம்பு பிடி வீரா் பாா்த்தீபன் மண்ணுளிப் பாம்பை பிடித்து அடா்ந்த காட்டுப் பகுதியில் விடுவிடுத்தாா்.