மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் முதியவருக்கு பொருத்தம்
மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு முதியவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு முதியவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
ஈரோடு- பெருந்துறை சாலையில் உள்ள அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பு மூலம் சிறுநீரகம் தானமாக பெற்று நோயாளிகளுக்கு பொருத்தி வருகின்றனா்.
இந்நிலையில், மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தை உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பு மூலம் பெற்று, ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 67 வயது முதியவருக்கு மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சரவணன் தலைமையில் பொருத்தப்பட்டது.
இது குறித்து மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சரவணன் கூறியதாவது:
மதுரையில் மூளைச்சாவு அடைந்த 61 வயது முதியவரின் சிறுநீரகத்தை தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பு மூலம் பெறப்பட்டு, மதுரையில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் ஈரோட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 67 வயது முதியவருக்கு பொருத்தப்பட்டுள்ளது என்றாா்.