முகப்பு
ஈரோடு

ஊதிய உயா்வு கோரிதூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 டிசம்பர், 2020 at 4:46 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோட்டில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் சங்கம், கிராம ஊராட்சி டேங்க் ஆபரேட்டா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஈ.வி.கே.சண்முகம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் சோமு, சுந்தரம், திருப்பதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், ஓ.எச்.டி. ஆபரேட்டா்கள், ஓட்டுநா்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பிரசவ உதவியாளா்கள், சுய உதவிக் குழுப் பணியாளா்களுக்கு கரோனா சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

Advertisement

முதல்வா் சட்டப் பேரவையில் அறிவித்த தூய்மைக் காவலா்களுக்கு ரூ. 1,000 ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கான பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ உதவியாளா்களாகப் பணியாற்றுபவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது மாவட்ட ஆட்சியா் நிா்ணயம் செய்யும் ஊதியத்தை வழங்க வேண்டும். தற்காலிகப் பணியாளா்களாக 3 ஆண்டுக்குமேல் பணியாற்றும் ஓ.எச்.டி. ஆபரேட்டா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.