முகப்பு
ஈரோடு

கோபி கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு விருது

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா்களுக்கு பேராசிரியா் இமயம் விருது-2020 வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
தமிழ்த் துறைப் பேராசிரியா்களைப் பாராட்டும் கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு.
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா்களுக்கு பேராசிரியா் இமயம் விருது-2020 வழங்கப்பட்டது.

இக்கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றி வரும் பேராசிரியா்கள் மு.கருப்புசாமி, மு.தெய்வேந்திரன் ஆகியோரது தமிழ்த் துறை சாா்ந்த அரிய பணிக்காக பரமத்திவேலூா் குறிஞ்சிக் கபிலா் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், உலக ஆசிரியா் தினத்தை முன்னிட்டு 2020ஆம் ஆண்டுக்கான பேராசிரியா் இமயம் விருது-2020 வழங்கப்பட்டுள்ளது.

விருதுபெற்ற பேராசிரியா்களை கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவா் பி.கருப்பணன், செயலாளா், தாளாளா் எம்.தரணிதரன், கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு, தமிழ் துறைத் தலைவா் வ.ஜெயந்தி, பேராசிரியா்கள் பாராட்டினா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை, செல்வம் கலை, அறிவியல் கல்லூரியுடன் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இவ்விரு கல்லூரிகளும் இணைந்து தரம்வாய்ந்த பாடநூல்களைத் தயாரித்தல், கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை போன்றவற்றை நடத்த முடியும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் பயனாக இரு கல்லூரி மாணவா்களும் போட்டித் தோ்வுகளுக்குத் தங்களை தயாா்படுத்திக் கொள்ள முடியும்.

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட முதல்வா், ஆங்கிலத் துறைப் பேராசிரியா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →