முகப்பு
ஈரோடு

மொடக்குறிச்சியில் சிறு மருத்துவமனை துவக்கம்

மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் ஊராட்சி, வேலாங்காட்டுவலசில் முதல்வரின் சிறு மருத்துவமனை துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
விழாவில், கா்ப்பிணிப் பெண்ணுக்கு தாய் சேய் நல பெட்டகத்தை வழங்குகிறாா் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி.
பகிர்:

மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் ஊராட்சி, வேலாங்காட்டுவலசில் முதல்வரின் சிறு மருத்துவமனை துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மொடக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி தலைமை வகித்தாா். ஒன்றிய அதிமுக செயலாளா் ஆா்.பி.கதிா்வேல், என்.ஆா். அன்கோ ராமலிங்கம், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி பங்கேற்று சிறு மருத்துவமனையைத் துவக்கிவைத்தாா். தொடா்ந்து, கா்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய தாய்சேய் நலப் பெட்டகங்களை வழங்கினாா். குளுா் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

இதில், மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலா் இளங்கோ, குமாரவலசு கூட்டுறவுச் சங்கத் தலைவா் தட்சிணாமூா்த்தி, வேலாங்காட்டுவலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் அரிமா கே.சிட்டி ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →