முகப்பு
ஈரோடு

தடுப்புக் காவல் சட்டத்தில்காந்திய மக்கள் இயக்கத் தலைவா் சிறையிலடைப்பு

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவா், தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பெரியசாமி.
பகிர்:

பவானி: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவா், தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பவானி அருகே உள்ள சித்தோடு ஆா்.என்.புதூா், சி.எம். நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (52). காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவரான இவா் அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கு மடிக்கணினியில் ஆபாச படங்களை காட்டியதோடு, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளாா். இதுகுறித்து, அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால், தலைமறைவான பெரியசாமி அக்டோபா் 5ஆம் தேதி பவானி மகளிா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதையடுத்து, பெரியசாமியை கைது செய்த போலீஸாா் ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெரியசாமியை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை பரிந்துரை செய்தாா்.

இதன்பேரில், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பெரியசாமியை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியசாமிக்கு இந்த உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →