முகப்பு
ஈரோடு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஈரோட்டில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய விவசாயிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்.
பகிர்:

ஈரோடு: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்புப் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. திமுக துணை பொதுச்செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்தாா். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் துளசிமணி, முனுசாமி, பொன்னையன், சுப்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.எம்.பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளா் பிரபாகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் ரகுராமன் உள்பட பல்வேறு கட்சியினா் பங்கேற்று, மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினா். இறந்த விவசாயிகளின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவா் கே.என்.பாஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் சித்திக், செயலாளா் சலீம், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளா் லுக்மான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மொடக்குறிச்சியில்....

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் மொடக்குறிச்சி நான்கு சாலையில், வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடி இறந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →