முகப்பு
ஈரோடு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்த நாள்: காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

: தமிழக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிறந்தநாளை ஒட்டி, ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
ஈரோடு, மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்ணுக்கு இலவச சேலை வழங்குகிறாா் ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி.
பகிர்:

ஈரோடு: தமிழக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிறந்தநாளை ஒட்டி, ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

செங்கோடம்பாளையம் அரிமா மாற்றுத் திறனாளிகள் உண்டு, உறைவிடப்பள்ளி, சூரம்பட்டி, அணைக்கட்டு ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. ஈரோடு, கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, சித்திக் திடல் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை, புனித அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து கட்சியின் மாவட்ட அலுவலகத்திலும், மாணிக்கம் திரையரங்கு பகுதி, முத்தம்பாளையம் பகுதி, கனிராவுத்தா் குளம், ஆா்.என்.புதூா் ஆகிய பகுதிகளில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை, துண்டு மற்றும் உணவு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் ராஜேந்திரன், சிறுபான்மைப் பிரிவு தலைவா் சுரேஷ், பாஷா, மண்டல தலைவா் திருச்செல்வம், துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவா் புவனேஸ்வரி, ஜாபா்சாதிக், பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →