முகப்பு
ஈரோடு

சித்தோடு அருகே காா் மோதியதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் பலி

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
அனிதா .
பகிர்:

பவானி: சித்தோடு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சித்தோட்டை அடுத்த நசியனூா், பிளஸ்ஸிங் அவென்யூவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் மனைவி அனிதா (40). இவருக்கு ஒரு மகன் உள்ளாா். அனிதா, பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பிரிவில் கணினி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தாா். பவானியில் உள்ள அலுவலகத்துக்கு தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வந்தாா்.

இந்நிலையில் அனிதா, நசியனூா் வழியாக சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கங்காபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற காா், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →