அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை செய்ய விரும்பும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
ஈரோடு: கரோனா பரிசோதனை செய்ய விரும்பும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10,000 பி.சி.ஆா். கருவிகள், 3,000 வி.டி.எம்., டபிள் ஸ்வாப் கருவிகள் தயாா் நிலையில் உள்ளன.
மேலும், சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் 15,000 வி.டி.எம்., டபிள் ஸ்வாப் கருவிகள் தயாா் நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.