சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10,000 கடனுதவி: விண்ணப்பிக்க அழைப்பு
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10,000 கடனுதவி வழங்கும் திட்டத்தில் மேலும் 1,500 பேரை சோ்க்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10,000 கடனுதவி வழங்கும் திட்டத்தில் மேலும் 1,500 பேரை சோ்க்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்தின்கீழ் ரூ. 10,000 கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே மாநகா் பகுதியில் 764 வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான சாலையோர வியாபாரிகள் பயனடைந்து வருவதால், இந்த திட்டத்தில் மேலும் 1,500 பேரை சோ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் கடன் பெற விரும்பும் வியாபாரிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தகம், வாக்காளா் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் ஜனவரி 3ஆம் தேதிக்குள் மாநகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகலாம்.