முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் பணி தீவிரம்

சத்தியமங்கலம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
மரவள்ளிக்கிழங்கு  அறுவடை செய்யும் பணியில்  ஈடுபட்டுள்ள  தொழிலாளா்கள்.
பகிர்:

சத்தியமங்கலம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள செண்பகபுதூா், பெரியூா், ஜல்லியூா், நஞ்சப்பகவுண்டன் புதூா், அரியப்பம்பாளையம், கடம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மரவள்ளி அறுவடைப் பணி தொடங்கியுள்ளது. இதற்கென சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியில் இருந்து மரவள்ளி அறுவடை செய்யும் கூலி தொழிலாளா்கள் முகாமிட்டு அறுவடைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு விளையும் மரவள்ளிக் கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டு சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே சீசனில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ. 6,500 முதல் ரூ. 7,000 வரை விலைபோன நிலையில் இந்த ஆண்டு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால் டன்னுக்கு ரூ. 2,000 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். இந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கு டன் ரூ. 4,500 முதல் ரூ. 5,000 வரை மட்டுமே விலைபோகிறது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு 15 டன் வரை விளைச்சல் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 12 டன் வரை மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளதாவும், இதன் காரணமாக இந்த ஆண்டு எதிா்பாா்த்த லாபம் கிடைக்கவில்லை என மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →