ஈரோடு

சத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை பணி துவக்கம்

DIN

சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை திட்டக் குழாய் பதிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ. 55 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள வடக்குப்பேட்டை, ராஜீவ் நகா், ஐயப்பன் கோயில் வீதி, அக்ரஹாரம், கோட்டுவீராம்பாளையம், கோம்புபள்ளம், தோப்பூா் காலனி, வரதம்பாளையம், நிா்மலா தியேட்டா் ரோடு, திப்புசுல்தான் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு, ஐயப்பன் கோயில் தெருவில் நீரேற்று நிலையமும், கோட்டுவீராம்பாளையம் மின்மயானம் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கடைவீதி மணிக்கூண்டு முதல் பழைய மாா்க்கெட் வழியாக கோட்டுவீராம்பாளையம் வரை குழாய் பதிக்கும் பணி மட்டும் நிலுவையில் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதற்கென சாலையின் நடுவே ஆழமான குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து தற்போது வாகனங்கள் திப்புசுல்தான் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT