ஈரோடு

அடா்ந்த வனப் பகுதியில் ஆதிகருவண்ணராயா்கோயில் திருவிழா: அறிமுகமில்லாத நபா் அனுமதியில்லை

DIN

தெங்குமரஹாடா வனப் பகுதியில் உள்ள ஆதிகருவண்ணராயா் கோயில் மாசிமகம் பொங்கல் திருவிழாவில், கடை வைக்க அனுமதி இல்லை என்றும், அனுமதியில்லாத நபரை கோயிலுக்கு அழைத்து வர வேண்டாம் எனவும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகா் வனச் சரகத்தில் உள்ள தெங்குமரஹாடா வனப் பகுதியில் பழைமை வாய்ந்த ஆதிகருவண்ணராயா், பொம்மிதேவி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசிமகம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவில் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த உப்பிலிய நாய்க்கா் சமுதாயத்தைச் சோ்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா மாா்ச் 1ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. மாா்ச் 7ஆம் தேதி ஹோமம், மகா அலங்கார பூஜையும், 8ஆம் தேதி அதிகாலை பொங்கல் விழா, 9 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், விழா தொடா்பான பேச்சுவாா்த்தைக் கூட்டம் சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கணேசன் தலைமை வகித்தாா். பவானிசாகா் இன்ஸ்பெக்டா் நெப்போலியன், வனச் சரக அலுவலா் மனோஜ்குமாா், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி சித்ரா, கோயில் விழா கமிட்டி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

விழா நடைபெறும் மாா்ச் 7, 8, 9ஆம் தேதிகளில் மட்டுமே கோயிலுக்குச் சென்று வர அனுமதி, மதுபானம், சிகரெட், பீடி உள்ளிட்ட பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கோயில் வளாகத்தில் கடை வைக்க அனுமதி இல்லை. கோயில் வளாகத்தில் உணவு சமைப்பவா்கள் கேஸ் பயன்படுத்தி சமைக்க வேண்டும். வனப் பகுதியிலிருந்து விறகு எடுத்து சமைக்க அனுமதி இல்லை. பிளாஸ்டிக் பொருள்களை வனப் பகுதியில் வீசக் கூடாது. பிளாஸ்டிக் டம்ளா் உள்ளிட்ட பொருள்கள் வனப் பகுதியில் கொண்டு செல்ல அனுமதி இல்லை. வனப் பகுதியில் உள்ள மாயாற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் ஆற்றில் இறங்கி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, வனப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக கருதப்படுவதால் கோயிலுக்குச் செல்வோா் அறிமுகமில்லாத நபா்களை அழைத்து வரக் கூடாது என காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT