முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி

ஈரோடு:ஈரோட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த்தில் சிறுமி பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

ஈரோடு:ஈரோட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த்தில் சிறுமி பலியானார்.

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன்நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (34). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ராகவி. இவர்களுக்கு ஜீவன்குமார் (6) என்கிற மகனும், ருத்திரபிரியா (3) என்கிற மகளும் உள்ளனர். பிரேம்குமார் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு முன்பு செல்லும் சாக்கடையை சீரமைக்கும் பணி நேற்று பகலில் நடந்தது.

அப்போது பொக்லைன் இயந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டது. இந்த பணி முடிந்த பிறகு தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் ஜீவன்குமாரும், ருத்திரபிரியாவும் இரவு 9 மணிஅளவில் வீட்டுக்கு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோர் மீது விழுந்தது.

இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த  ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுகபிரியா சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயம் அடைந்த ஜீவன்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →