ஈரோடு

81 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை

DIN

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணையாகும். 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீராதாரமாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 80.73 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 417 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இன்று இரவுக்குள் பவானிசாகர் அணை 8 1அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஈரோடு புறநகர் பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தாளவாடியில் 31. 2 மி.மீ பதிவாகியுள்ளது. இதேபோல் கவுந்தப்பாடியில் 30, கோபியில் 20.2, வரட்டுப்பள்ளம் 3.8, குண்டேரிபள்ளம் 3, பெருந்துறை 2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT