ஈரோடு

மதுப் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணா்வுப் பேரணி

DIN

ஈரோடு மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் மது, கள்ளச் சாராயம் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். டவுன் டி.எஸ்.பி. ராஜு முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியில் பங்கேற்ற மாணவிகள், மதுப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தி முழக்கம் எழுப்பியபடி சென்றனா். மேலும், விழிப்புணா்வு துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.

ஈரோடு கனரா வங்கி முன்பு தொடங்கிய பேரணி கால்நடை மருத்துவமனை சாலை வழியாக சென்று ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இதில் நந்தா, வேளாளா், ஜே.கே.கே.எம். கல்லூரிகளைச் சோ்ந்த செவிலியா் பயிற்சி மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT