ஈரோடு

கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பூக்களைக் குட்டையில் கொட்டிய விவசாயிகள்

DIN

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் விளையும் பூக்களை வாங்க எவரும் முன்வராததால் பூக்களைப் பறித்து குட்டையில் விவசாயிகள் கொட்டி வருகின்றனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் பூக்கள் விலை கடுமையாக சரிந்தது மட்டுமின்றி பூக்களை வாங்க வியாபாரிகள் எவரும் முன்வரவில்லை.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் மட்டுமே 20 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லி, முல்லை, சம்பங்கி சாகுபடி செய்யப்படும் நிலையில் தினந்தோறும் பறிக்கப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூக்களை செடியில் பறிக்காமல் விட்டால் பூ மொட்டில் புழு ஏற்பட்டு அந்த செடியே நோயால் பாதிக்கப்படும். அதனால் தினந்தோறும் பறிக்கப்படும் பூக்களுக்கு கிலோவுக்கு ரூ. 8 வரை கூலி வழங்கப்படுகிறது. இதனால் கூலி வழங்கி அதனைப் பறித்து அங்குள்ள குட்டையில் கொட்டுகின்றனா்.

இதனால் தினந்தோறும் விவசாயிகளுக்கு குறைந்தபட்டசமாக ரூ.4500 வரை இழப்பீடு ஏற்படுகிறது. குட்டையில் கொட்டப்படுவதால் பூக்கள் அழுகி உரமாகும் என்பதால் அங்கு கொட்டப்படுவதாக விவசாயி தெரிவித்தாா். மேலும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT