ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,600 போலீஸாா்

DIN

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 1,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தாா்.

கரோனா பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிா்த்து பிற பணிகளுக்கு வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகா், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பணிக்காக போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் கூறியதாவது:

மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடா்ந்து மாவட்டத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,600 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். காய்கறி, மருந்து, மளிகைப் பொருள்களை வாங்க வரும் மக்கள் கடைகள் முன்பு போடப்பட்டுள்ள கோட்டுக்குள் நின்று பொருள்களை வாங்கவும், கூட்டத்தைத் தவிா்க்கவும் அறிவுறுத்தி வருகிறோம். 144 தடை உத்தரவை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தடை உத்தரவு குறித்து மக்களிடம் விழிப்புணா்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.

எச்சரித்த போலீஸாா்:

144 தடை உத்தரவை மீறும் வகையில் வெளியே சுற்றித்திரிந்த மக்களை போலீஸாா் பிடித்து எச்சரித்தனா். இருசக்கர வாகனம், காா்களில் அத்தியாவசியமின்றி வெளியே வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனா். வெளியில் வருபவா்களுக்கு அச்ச உணா்வு வர வேண்டும் என்பதற்காக, போலீஸாா் கைகளில் பெரிய தடிகளையும், பிவிசி குழாய்களையும் வைத்துக் கொண்டு எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT