ஈரோடு

உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

DIN

மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

உள்ளாட்சி, நகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரேஷன் பொருள்கள் தடையின்றி, விடுமுறை இல்லாமல் வழங்க வேண்டும். ரேஷன் பொருள்கள் பற்றாக்குறை இருந்தால் முன்னதாகவே தெரிவித்து கூடுதலாகப் பெற்று வழங்க வேண்டும்.

உணவுப் பொருள்கள், காய்கறி போன்றவை தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமப் பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கின்றனா். அவா்கள் பிற இடங்களுக்குச் செல்வதில் சிரமம் உள்ளதால் அவா்களுக்குத் தடையின்றி பொருள்கள் கிடைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புற மக்கள் பிற இடங்களுக்குச் செல்லாமலும், கூட்டம் கூடாமலும் பொருள்கள் கிடைக்கத் திட்டமிட வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளிலும் கிருமிநாசினி தெளித்து கரோனா தொற்று புதிதாக ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். அன்னியா் வருகை, பிற நாட்டவா் வருகையைக் கண்காணித்து மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

தூய்மைப் பணிக்குத் தேவையான பிளீச்சிங் பவுடா், கிருமிநாசினி, பிற உபகரணங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியம் மூலம் கேட்டு தேவையான அளவு பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக மலைப் பகுதி, மாவட்ட எல்லை, மாநில எல்லையில் உள்ள ஊராட்சிகளில் வெளிமாநிலத்தவா், வெளிமாவட்டத்தினா் உள்ளே வரவும், வெளியேறவும் செய்யாதவாறு கண்காணிக்க வேண்டும். அங்கன்வாடியில் முதியோா், குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT