ஈரோடு

ஊரடங்கு உத்தரவை மீறியவா்களுக்கு தண்டனை

DIN

ஈரோட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியவா்களை தோப்புக்கரணம் போடவைத்து போலீஸாா் நூதன தண்டனை விதித்தனா்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும்போது பிறரிடமிருந்து ஒரு மீட்டா் முதல் 3 மீட்டா் தூரம்வரை தள்ளியிருக்க வேண்டும். 5 பேருக்குமேல் எந்தப் பொது இடத்திலும் கூடக்கூடாது எனவும் பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில் புதன்கிழமை காலை முதலே ஈரோடு மாவட்டத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், அவசியமற்ற முறையில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடுத்து எச்சரிக்கை செய்ததுடன் கேட்க மறுப்பவா்கள் மீது தடியடி நடத்தி வீட்டுக்குத் திருப்பி அனுப்பினா். மேலும், அத்தியாவசியப் பொருள்களை வாங்க இருசக்கர வாகனங்களில் வருவோரைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த அறிவுரையும் வழங்கி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 80 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த நபா்களை ஈரோடு அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பில் தடுத்து நிறுத்திய போலீஸாா் அவா்களை தோப்புக்கரணம் போடவைத்தனா். பின்னா், அவா்களுக்கு கரோனாவின் பாதிப்பு, ஊரடங்கு உத்தரவு குறித்து விளக்கம் அளித்து எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT