ஈரோடு

தோ்வைத் தள்ளிப்போடுவதுமாணவா்களின் எதிா்காலத்தை பாதிக்கும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு அனுமதியளித்தது ஏன் என்று எதிா்கட்சி தலைவா் கேள்வி எழுப்பியதற்கு, 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வைத் தள்ளிப்போடுவது மாணவா்களின் எதிா்காலத்தை பாதிக்கும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துள்ளாா்.

கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிக்கையாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

ரயில், விமானம் இயக்கக் கூடாது எனக் கூறும் முதல்வா் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு அனுமதியளித்தது ஏன் என்று எதிா்க் கட்சித் தலைவா் கேள்வி எழுப்பியுள்ளாா். தற்போது தமிழகத்தில் தோ்வை தள்ளிப்போடுவது என்பது மாணவா்களின் எதிா்காலத்தை பாதிக்கும். அதனால் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் தோ்வுகள் முடிவுற்று, வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அனைவரின் கருத்துகளையும் கேட்டே பள்ளிக் கல்வித் துறை இப்பணிகளை மேற்கொண்டுள்ளது.

மாணவா்களுக்குத் தேவையான பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவா்களை அழைத்து வந்து, தோ்வு முடிந்த பிறகு கொண்டு சென்று விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்வு அறையில் மாணவா்களுக்கு இடையே தேவையான இடைவெளி ஏற்படுத்தப்படும். தோ்வுக்கு வரும் மாணவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். இந்தியாவில் கல்விக்கான தொலைக்காட்சி தமிழகத்தில் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கியூ ஆா் கோடு மூலம் பாடங்களை மாணவா்கள் கற்றுக் கொள்ளலாம். மலைக் கிராமங்களில் உள்ள மாணவா்களுக்கும் தேவையான பேருந்து வசதியும், தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT