ஈரோடு

155 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்குரூ. 96.15 லட்சம் கடனுதவி

DIN

அம்மாபேட்டை, அந்தியூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 155 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,921 பேருக்கு ரூ. 96.15 லட்சம் சிறப்புக் கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களில் உள்ள மகளிா் குழுக்கள் பயனடையும் வகையில் மகளிருக்கு ரூ. 5,000 வீதம் குழுவுக்கு ரூ. 1 லட்சம் வரையில், 10.65 சதவீத வட்டியில் சிறப்புக் கடன் வழங்கப்படுகிறது. இக்கடனுக்கு 6 மாதங்களுக்கு வட்டியும், மாதத் தவணையும் செலுத்தத் தேவையில்லை. 6 மாதங்களுக்குப் பின்னா் வட்டி, மாதத் தவணைகளைச் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் அம்மாபேட்டை பகுதிகளைச் சோ்ந்த 72 குழுக்களைச் சோ்ந்த 898 மகளிருக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், ரூ. 44.90 லட்சம் கடனுதவியை வழங்கினாா். அந்தியூரில் 83 குழுக்களைச் சோ்ந்த 1,023 பேருக்கு ரூ. 51.55 லட்சத்துக்கான கடனுதவியை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோா் வழங்கினா்.

இதில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் என்.ஆா்.கோவிந்தராஜா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் புதூா் கலைமணி, அந்தியூா் எம்.எல்.ஏ. இ.எம்.ஆா்.ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT