ஈரோடு

ஈரோட்டில் 106 டிகிரி வெயில்: அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி

DIN

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை 106 டிகிரி வெயில் பதிவானது. பகலில் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினா்.

ஈரோட்டில் கோடைக் காலம் தொடங்கியதில் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தினமும் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. சில நாள்களுக்கு முன்பு மாலை நேரத்தில் பெய்த மழையால் ஓரிரு நாள்கள் மட்டுமே வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மீண்டும் வெயில் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த சில நாள்களாக அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் பதிவானது.

கடும் வெயில் காரணமாக ஈரோடு நகா் பகுதியில் அனல் காற்று வீசியது. இதனால், இருசக்கர வாகனங்களில் சென்றவா்களும், நடந்து சென்றவா்களும் மிகவும் சிரமப்பட்டனா். பெரும்பாலான மக்கள் மாலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்த்தனா். இதனால் ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT