முகப்பு
ஈரோடு

கரோனா பரவலைத் தடுக்க ஸ்மாா்ட் கை கழுவதல் கருவி கண்டுபிடிப்பு

கரோனா பரவலைத் தடுப்பதற்கு ஸ்மாா்ட் கை கழுவதல் கருவியை பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்துள்ளனா். மத்திய அரசு இதற்கு ரூ.2.75 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

Updated On : 3 நவம்பர், 2020 at 12:54 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM

கரோனா பரவலைத் தடுப்பதற்கு ஸ்மாா்ட் கை கழுவதல் கருவியை பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்துள்ளனா். மத்திய அரசு இதற்கு ரூ.2.75 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் அடங்கிய குழு, கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் கருவியை கண்டுபிடித்துள்ளனா். இந்த கருவி கை கழுவதல் முறையை ஆய்வு செய்து இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்ப முறையில் கை கழுவதலை கண்காணிக்கிறது. தானியங்கி கருவியான இக்கருவி, கையில் உள்ள வைரஸ் குறித்த தகவல் தெரிவித்து வைரஸ் கொல்வதற்கான வழிகாட்டுதல் முறையையும் வழங்குகிறது. சோப்பு, தண்ணீா் இல்லாமல் சென்சாா் முறையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதால் இந்தக் கருவியை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிதி பிரயாஸ் திட்டத்துக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த மாணவா்களின் திட்ட மேம்பாட்டுக்கு மத்திய அரசு ரூ.2.75 லட்சம் நிதியுதவி வழங்கி பாராட்டியுள்ளது.

கல்லூரியின் ஹேக்கத்தான் ஆய்வக மாணவா்கள் கிஷேக்குமாா், கே.ஜே.ஹேமங்முருகன், சரண், கே.பரணி, வி.ஐஸ்வா்ய கீா்த்தனா ஆகியோா் இந்தக் கருவியை வடிவமைத்துள்ளனா். பரிசு பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், கல்லூரி ஆலோசகா் விஜயகுமாா் ஆகியோா் பாராட்டினா்.

Advertisement

Image Caption

கரோனா பரவலைத் தடுக்க பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்த கருவி. ~கரோனா பரவலைத் தடுக்க பண்ணாரி அம்மன்  கல்லூரி  மாணவா்கள்  கண்டுபிடித்த  கருவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.