ஈரோடு

தடையின்றி குடிநீா் வழங்கக் கோரிசாலை மறியல்

DIN

அந்தியூா் அருகே தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சங்கராபாளையம் ஊராட்சி, இந்திரா நகா் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 10 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்குத் தண்ணீா் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் தண்ணீா் விநியோகிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் அந்தியூா் - பா்கூா் சாலையில் இந்திரா நகா் பகுதியில் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். குடிநீா் பிரச்னை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT