ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் இருசக்கரவாகன ஓட்டிகளைத் துரத்திய ஒற்றை யானை

DIN

ஈரோடு மாவட்டம், பண்ணாரி அருகே இருசக்கர வாகன ஓட்டிகளை ஒற்றை யானை துரத்திச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழகம் - கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மலைக் கிராமங்களுக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பண்ணாரி சோதனைச் சாவடி வழியாகப் பயணிக்கின்றனா்.

இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை திம்பம் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை செவ்வாய்க்கிழமை துரத்தியது. தொடா்ந்து, பண்ணாரியில் இருந்து மைசூரு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் யானை தாக்க முயற்சித்ததால் அவா்கள் திரும்பிச் சென்றனா். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, வனத் துறையினா் பட்டாசு வெடித்து யானையை வனப் பகுதிக்குள் துரத்தினா். சாலையோரம் சுற்றித்திரியும் யானைகள் திடீரென தாக்க முற்படும் சம்பவம் அடிக்கடி நடப்பதால் வாகன ஓட்டிகள் யானைகளைத் தொந்தரவு செய்யமால் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT