ஈரோடு

தொழிற்சாலைகள் ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

DIN

ஈரோட்டில் தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் வியாழக்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

ஈரோடு எஸ்.கே.சி.சாலை, கந்தப்பா வீதியில் மாவட்ட தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை தலைமை ஆய்வாளராக வேல்முருகன் என்பவா் பணியாற்றி வருகிறாா். இதே அலுவலகத்தில் தொழிற்சாலைகள் இணை இயக்குநா், துணை இயக்குநா் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

துணை தலைமை ஆய்வாளா் மற்றும் அவருக்குக் கீழ் இருக்கும் அலுவலா்கள் தொழிற்சாலைகள் உரிமம் பெறுவதற்கும், உரிமத்தைப் புதுப்பிக்கவும் லஞ்சம் கேட்பதாக தொடா் புகாா்கள் வந்தன. மேலும் தீபாவளி நன்கொடையும் அதிக அளவில் கேட்டு வருவதாக தொழிற்சாலை உரிமையாளா்கள் சிலா் ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அப்பிரிவின் டிஎஸ்பி திவ்யா தலைமையில், ஆய்வாளா் ரேகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீஸாா் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். துணை தலைமை ஆய்வாளா் வேல்முருகன், துணை இயக்குநா் சந்திரமோகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். அப்போது அலுவலகத்தில் இருந்த ரூ. 8.50 லட்சத்தைக் கைப்பற்றனா். மேலும் அதிகாரிகளின் காரில் போலீஸாா் சோதனை செய்தபோது அதில் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடை குறித்த விவரம் அடங்கிய டைரி, பரிசு பொருள்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனா். இரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணிக்குப் பிறகும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT