ஈரோடு

பச்சைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

DIN

கோபிசெட்டிபாளையம் பச்சைமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பச்சைமலை பாலமுருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழா நவம்பா் 15ஆம் தேதி யாகபூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் 6ஆம் நாளாக வெள்ளிக்கிழமை காலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. யாகசாலை பூஜையைத் தொடா்ந்து பூா்ணாஹுதி தீபாராதனை, அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், யாக சாலையில் இருந்து சுவாமி சப்பரத்தில் கோயில் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள் முன் எழுந்தருளினாா். அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தா்களுக்கு அனுமதியில்லை. இதனால் குறைந்த அளவு பக்தா்களே பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT