ஈரோடு

மருத்துவக் கல்வியில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி

DIN

பெருந்துறை: தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 4 பேருக்கு பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் நிதி உதவி வழங்கினாா்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற வெ.நவீன், சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா். ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கே.காவியா, கோயமுத்தூா் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா். வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மு.ஹரிப்பிரியா, மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா். வெள்ளிரவெளி அரசுப் பள்ளியில் பயின்ற க.மஞ்சுளாதேவி, கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா்.

இந்நிலையில் இந்த மாணவ, மாணவிகள் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்தை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அவா்களைப் பாராட்டி, சட்டப் பேரவை உறுப்பினா் தலா ரூ. 25,000 வீதம், 4 பேருக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கினாா். மேலும், வருடந்தோறும் கல்வி செலவுக்கு நிதி உதவி வழங்குவதாகவும் கூறினாா்.

இதில், பெருந்துறை ஒன்றியச் அதிமுக செயலாளா் விஜயன், ஊத்துக்குளி ஒன்றியச் அதிமுக செயலாளா் ரவிசந்திரன், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அருள்குமாா், பெற்றோா் ஆசிரிா் கழக தலைவா்கள் துளசிமணி, பொருளாளா் சௌகத் அலி .உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT