ஈரோடு

தொட்டம்பாளையம் டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபாட்டில்கள் விற்பனை

DIN

தொட்டம்பாளையம் டாஸ்மாக் கடையில் காலாவதியாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
சத்தியமங்கலம் அடுத்த தொட்டம்பாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுப்பானக்கடை செயல்படுகிறது. இன்று மதுபானக் குடோனில் இருந்து மதுபாட்டில் வந்தன. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மதுப்பிரியர் இந்த டாஸ்மாக் மதுப்பானக்கடையில் குவாட்டர் மதுப்பாட்டில் வாங்கியுள்ளார்.
குவாட்டர் பாட்டிலில் குறிப்பிட்ட விலையை விட கூடுதலாக ரூ.5 விற்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அந்த குவாட்டர் பாட்டில் சற்று வித்தியாசமாக கலரில் இருப்பது தெரிந்து காலாவதி நாளை பார்க்கும் போது ஒரு மாதத்துக்கு முன்பாகவே காலவாதி ஆகியுள்ளது. இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் முறையிட்டபோது அதனை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். 
கடந்த வாரம் பீர் பாட்டில் வாங்கிய போதும் இது போன்ற காலாவதியான பாட்டில் விற்கப்பட்டதாகவும் கரோனா காலத்தில் காலாவதியான மதுபாட்டில் தற்போது விற்பனையாவதாகவும் சென்னை டாஸ்மாக் நிர்வாகத்திடம் புகார் மனு அனுப்பியுள்ளார். அதே போல மதுப்பான பாரில் சாப்பிட்டபோதும் போலியான மதுபாட்டில் வழங்கவதாகவும் கூடுதல் விலை, சுகாதாரமில்லாத பார் என அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT