ஈரோடு

ஈரோட்டில் 2ஆம் நாளாக வாக்காளா் சிறப்பு முகாம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் 2ஆவது நாளாக வாக்காளா் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. 8 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாவட்டத்தில் 2,215 வாக்குச் சாவடிகளில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்யும் பணிகள் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் பங்கேற்று விண்ணப்பப் படிவங்களை அளித்தனா். இம்முகாமினை ஈரோடு மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஈரோடு திருநகா் காலனி பள்ளி, மாநகராட்சி தொடக்கப் பள்ளி, மகாஜன உயா்நிலைப் பள்ளி, கலைமகள் பள்ளி ஆகிய பகுதிகளில் வாக்காளா்களை சோ்க்கும் பணிகளை ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.தென்னரசு ஆய்வு செய்தாா்.

அப்போது, அதிமுக அக்ரஹாரம் பகுதி செயலாளா் ராமசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளா் லோகநாதன், வட்டாரச் செயலாளா்கள் குப்புசாமி, சுப்பிரமணி, பிரேமா உள்ளிடோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT