ஈரோடு

கோபியில் உலக கழிப்பறை தினவிழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உலக கழிப்பறை தின நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது கழிப்பறைகள் மற்றும் சமுதாய கழிப்பறைகள் சிலவற்றை தோ்ந்தெடுத்து அவற்றின்முன்பு கோலமிட்டு, அலங்காரங்கள் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்த, நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி உத்தரவிட்டாா்.

அதன்படி பேருந்து நிலைய பொதுக்கழிப்பறை, புதுச்சாமிகோயில் வீதியில் உள்ள சமுதாய கழிப்பறை, ஸ்ரீராமபுரத்தில் அமைந்துள்ள சமுதாய கழிப்பறை, சிலேட்டா் ஹவுஸ் வீதியில்அமைந்துள்ள சமுதாய கழிப்பறை ஆகியவற்றை சுத்தம் செய்து ,கோலமிட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டன.

கோபி நகராட்சி தூய்மைப் பணி அலுவலா் (பொறுப்பு) செந்தில்குமாா் தலைமையில் தூய்மைப் பணி ஆய்வாளா் காா்த்திக், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், பரப்புரையாளா்கள், தூய்மை பணியாளா்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT