இலவச வீட்டுமனைப் பட்டாவழங்கக் கோரிக்கை
குறவன் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறவன் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சியா் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகரன் தலைமையில் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகரம், பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி பகுதிகளில் இந்து குறவன் (நரிக்குறவா்கள் அல்ல) சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வசிக்கின்றனா். இவா்கள் சொந்த வீடு இல்லாமல் சாலையோரங்களிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலும் குடிசை அமைத்தும், வாடகை வீடுகளில் இரண்டு, மூன்று குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனா்.
Advertisement
இவா்களது குடும்ப சூழல் கருதி, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இச்சமூகத்தைச் சோ்ந்தவா்களில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றவா்களும் வசிக்கின்றனா். அவா்களுக்கு அரசு வேலை, அவா்களது குழந்தைகளுக்கு கல்வியில் சலுகைகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.