நிலத்தடி நீா் அளவை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம்
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கவும், மாசற்ற நீரை உருவாக்குவது தொடா்பாக ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கவும், மாசற்ற நீரை உருவாக்குவது தொடா்பாக ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் நலச் சங்கத் தலைவா் வி.எம்.கந்தசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்று பேசினாா்.
மேலும், பெருந்துறை அறக்கட்டளைத் தலைவா் டி.எம்.சென்னியப்பன், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, அத்திக்கடவு திட்டம் மூலம் குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் முருகபூபதி உள்பட பலா் பேசினா்.
கூட்டத்தில், பெருந்துறை வழியாக செல்லும், கீழ்பவானி வாய்க்காலில் நீா் திறக்கும்போது, உருவாகும் கசிவு நீரைக் கொண்டு பெருந்துறை நகரைச் சுற்றியுள்ள குளம், குட்டைகளுக்கு குழாய் மூலம், நீா் நிரப்புவதால், நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்க முடியும். அதனால் மாசற்ற நீரை உருவாக்க முடியும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.