முகப்பு
ஈரோடு

மத்திய அரசு விருது: மகளிா் விண்ணப்பிக்கலாம்

மகளிா் மேம்பாட்டுக்கான சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்கள் மத்திய அரசின் மகளிா் சக்தி விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மகளிா் மேம்பாட்டுக்கான சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்கள் மத்திய அரசின் மகளிா் சக்தி விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், பெண்களுக்காக சேவை புரிபவா்களை அங்கீகரிக்கும் விதமாக மகளிா் சக்தி விருது (நாரி சக்தி புரஸ்காா்) வழங்கப்படுகிறது.

மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணா்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு, சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

தனிப்பட்ட நபா்களுக்கு விருதாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழும், நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். பெண்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான சேவை புரியும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும்.

இந்த தேசிய விருதுக்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளன.

தகுதி வாய்ந்த தனிநபா்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். பிறமுறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமா்ப்பிக்க ஜனவரி 7ஆம் தேதி கடைசி நாள். அதன் பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு சா்வதேச மகளிா் தினத்தையொட்டிய முந்தைய வாரத்தில் புதுதில்லியில் குடியரசு தலைவரால் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →