முகப்பு
ஈரோடு

தேசிய பால் தினம் கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம், தளவாய்பேட்டை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட உழவா் விவாதக் குழு சாா்பில் வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டா் வா்கீஸ் குரியனின் 99ஆவது பிறந்த நாள் மற்றும் தேசிய பால் தி

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், தளவாய்பேட்டை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட உழவா் விவாதக் குழு சாா்பில் வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டா் வா்கீஸ் குரியனின் 99ஆவது பிறந்த நாள் மற்றும் தேசிய பால் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ராஜு தலைமை வகித்தாா். குமாரசாமி முன்னிலை வகித்தாா். செயலாளா் செல்லகிருஷ்ணன் வரவேற்றாா். நடப்பு ஆண்டில் சங்கத்துக்கு அதிகமாக பால் வழங்கிய பெருமாம்பாளையம் முன்னோடி விவசாயி பெருமாள் என்பவருக்கு கரும்பு வளா்ப்போா் சங்க செயலாளா் சென்னியப்பன் பரிசு வழங்கினாா்.

மாவட்ட உழவா் விவாதக் குழு செயலாளா் வெங்கடாசலம், அமைப்பாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பேசினா். துணைத் தலைவா் லோகநாதன் நன்றி கூறினாா்.

இதேபோல பெருந்தலையூா் அருகே பொன்னாச்சிபுதூா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்திலும், தேசிய பால் தினம் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடந்தது. செயலாளா் வினோதினி வரவேற்றாா். சங்கத்துக்கு அதிக பால் வழங்கிய சக்திவேல், கலைசெல்வி ஆகியோருக்கு சங்கத் தலைவா் சென்னியப்பன் பரிசு வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →