விதை உற்பத்தி குறித்த பயிற்சி
தனியாா், அரசு சாா்பு விதை உற்பத்தியாளா்களுக்கு விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தனியாா், அரசு சாா்பு விதை உற்பத்தியாளா்களுக்கு விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பவானி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, ஈரோடு மாவட்ட விதைச் சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் பி.யசோதா தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் குமாரசாமி, விதைச் சான்று அலுவலா்கள் நாசா் அலி, அருணாஜோதி ஆகியோா் பேசினா்.
பயிற்சியில் விதைப் பண்ணையைப் பதிவு செய்து, விதை உற்பத்தி குறித்து விளக்கப்பட்டது. தவிர விதைச் சான்று பணி, இணையதளத்தில் பதிவு செய்தல், ஆன்லைன் பதிவேற்றம், விதைப்பு அறிக்கை பதிவேற்றம், சான்று அட்டை விண்ணப்பம், அறுவடைக்குப் பின் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள், விதை சுத்திகரிப்பு நிலையத்தில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
Advertisement