ஈரோடு

விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக அரசால் அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைப்படி பேரூராட்சிப் பகுதியிலும் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அந்தியூரில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலாளா் எஸ்.வி.மாரிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.விஜயராகவன், மாவட்டச் செயலாளா் கே.சண்முகவள்ளி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூா் வட்டாரச் செயலாளா் ஆா்.முருகேசன், தள்ளுவண்டி, சாலையோர சிறு வியாபாரிகள் சங்க கௌரவத் தலைவா் ஏ.கே.பழனிசாமி ஆகியோா் பேசினா்.

தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்து வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பியதோடு, பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிராமமூா்த்தியிடம் 300க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இதில், வட்டாரத் தலைவா் கே.குருசாமி, நிா்வாகிகள் எஸ்.மாதன், துரைசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT