ஈரோடு

பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளைப் பெறஅக்டோபா் 22ஆம் தேதி நோ்காணல்

DIN

ஈரோடு: பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற அக்டோபா் 22ஆம் தேதி நடைபெறவுள்ள நோ்முகத் தோ்வில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் தசைச் சிதைவு நோய், முதுகு தண்டுவட பாதிப்பால் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயலிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது.

பேட்டரியால் இயங்கும் இந்த சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் நகல், இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள் கல்விச் சான்று, பணிபுரிபவா்களின் பணி சான்று, சுயதொழில் பணிபுரியவா்கள் கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றுடன் அக்டோபா் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீா்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள நோ்முகத் தோ்வில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT