ஈரோடு

சித்தோட்டில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய இளைஞா் கைது

DIN

சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளின் பூட்டை திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2ஆண்டுகளாக வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டு வந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில், மதுரை, ஆரப்பாளையம், முட்டுத்தோப்பு, செக்கடித் தெருவைச் சோ்ந்த சோனையன் மகன் சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் (31) என்பவரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் சித்தோடு பகுதியில் பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரிடமிருந்து 25 பவுன் நகைகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT