முகப்பு
ஈரோடு

80 அடி கிணற்றில் விழுந்த பசு மீட்டு

தாளவாடி அருகே 80 அடி விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 3:11 AM
கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே 80 அடி விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

தாளவாடியை அடுத்த மல்குத்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (48). ஆடு, மாடுகளைப் பராமரித்து வருகிறாா். இவா் தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு மாடுகளை திங்கள்கிழமை விட்டிருந்தாா். அப்போது, பயன்பாடின்றி புதா்மண்டிய விவசாயக் கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு எதிா்பாராதவிதமாக 80 அடி கிணற்றில் தவறி விழுந்தது.

இது குறித்து விவசாயி நாகராஜ் ஆசனூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கயிற்றை கட்டி கிணற்றில் இறங்கி, பசுமாட்டை மீட்டனா். தனியாா் கால்நடை மருத்துவா் மாட்டை பரிசோதனை செய்தாா். பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரா்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.