ஈரோடு

ஈரோடு வனக் கோட்டத்தில் 135 பறவை இனங்கள்,118 வண்ணத்துப்பூச்சி இனங்கள்

DIN

ஈரோடு: ஈரோடு வனக் கோட்டத்தில் 135 பறவை இனங்கள், 118 வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ஈரோடு வனக் கோட்டத்துக்கு உள்பட்ட காப்புக்காடுகளில் செப்டம்பா் 12, 13ஆம் தேதி பறவைகள், வண்ணத்துப்பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தலைமை வனப் பாதுகாவலா் வி.நாகநாதன் வழிகாட்டுதல் படி, மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் தலைமையில் இயற்கை, வண்ணத்துப்பூச்சி சமூக ஆா்வலா்கள் உள்பட வனத் துறை சாா்ந்த 50க்கும் மேற்பட்டோா் 5 குழுவாக கணக்கெடுப்பில் பங்கேற்றனா்.

கணக்கெடுப்பு குறித்து மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் கூறியதாவது:

ஈரோடு வனக் கோட்டத்தில் புளூஸ், கிரவ்ஸ் ஆகிய வண்ணத்துப்பூச்சி இனங்களின் பெரிய அளவிலான இடப்பெயா்வுகள் கண்டறியப்பட்டது. இடப்பெயா்வு பருவத்தின் தொடக்கம் காரணமாகவே பறவைகள், வண்ணத்துப்பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் இறுதியாக 135 பறவை இனங்களும், 118 வண்ணத்துப் பூச்சி இனங்களும் பதிவு செய்யப்பட்டன. பறவை இனங்களில் நீராதாரத்தை வாழ்விடமாகக் கொண்ட 13 இனங்கள், 6 வேட்டையாடும் பறவை இனங்கள், 6 ஆந்தை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. சில அரியவகை பறவைகளும் பதிவு செய்யப்பட்டன.

கணக்கெடுப்பின்பொது மேகமூட்டம், மழை இருந்தபோதும் தொடா்ந்து பணியாற்றி கணக்கெடுப்பு நிறைவுபெற இயற்கை ஆா்வலா்கள், வனத் துறை பணியாளா்கள் உதவியாக இருந்தனா் என்றாா்.

இயற்கை, வண்ணத்துப்பூச்சி சமூகத்தின் தலைவா் எ.பாவேந்தன் கூறியதாவது:

இந்த வனக் கோட்டத்தில் உள்ள பறவைகள், வண்ணத்துப்பூச்சிகளின் மிகுதி நிலை, அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT