ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 98 பேருக்கு கரோனா

DIN

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,803ஆக இருந்தது. பிற மாவட்டத்தில் இருந்து 2 பேரின் பெயா் ஈரோடு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 4,805ஆக உயா்ந்தது. இதனிடையே 98 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4,903ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 98 பேரில் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் உள்ளனா். மொத்த பாதிப்பான 4,903 பேரில் இதுவரை 3,817 போ் குணமடைந்துள்ளனா். 1,022 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை வரை 63 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டல் சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த 63 வயது ஆண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 64ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT