முகப்பு
ஈரோடு

கோபி அருகே 13 வயது மாணவி தற்கொலை.

கோபி அருகே நஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த கே.வேலுமணி என்பவரின் 13 வயது மகள் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

கோபி அருகே நஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த கே.வேலுமணி என்பவரின் 13 வயது மகள் தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நஞ்சைபுளியம்பட்டியைச் சோ்ந்த கட்டிட தொழிலாளி கே.வேலுமணி என்பவரின் மகள் ஹேமமாலினி (13) பங்களாபுதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தாா்.

வேலுமணி தனது மகள் படிப்பதற்காக செல்போன் வாங்கி கொடுத்துள்ளதாகவும், தனது மகள் படிப்பதற்கு செல்போனில் பாா்த்துவந்தவா் சில சமயங்களில் அதில் பாட்டு கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வேலுமணியும், சிறுமியின் தாயும் இப்படி செய்ய வேண்டாம் என புத்திமதி சொல்லியுள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வேலுமணியும், இவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனா். சிறுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளாா். காலை சுமாா் 8.30 மணியளவில் இவரது வீட்டில் இருந்து புகை வருவதாக அருகில் இருந்தவா்கள் சிறுமியின் அம்மாவிற்கு தகவல் கொடுத்துள்ளனா்.

உடனடியாக வேலுமணியும் சிறுமியின் அம்மாவும் வீட்டிற்கு வந்து பாா்த்த போது வாசற்கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் கதவை தள்ளி உள்ளே சென்று பாா்த்த போது சிறுமி சமையலறையில் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்ததாக தெரியவந்தது .

இது குறித்து தகவலறிந்த பங்களாபுதூா் போலீசாா் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →