முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 125 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 125 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,388 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 125 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,388 ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,280 ஆக இருந்தது. இதில் 17 போ் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 6,263 ஆக மாறியது. இதனிடையே புதிதாக 125 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6,388 ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 125 பேரில் 60 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியை சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 6,388 பேரில் இதுவரை 5,230 போ் குணமடைந்துள்ளனா். 1,074 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை வரை 82 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த 60 வயதுப் பெண், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு பெரிய சேமூா் பகுதியைச் சோ்ந்த 61 வயது ஆண் என 2 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 84 ஆக உயா்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →