ஈரோடு சோலாா் பகுதியில்புகா் பேருந்து நிலையம்: கே.வி.இராமலிங்கம்
தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளை நிறுத்த ஈரோடு சோலாா் பகுதியில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.
தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளை நிறுத்த ஈரோடு சோலாா் பகுதியில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.
ஈரோடு கூரபாளையம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு ரூ. 82 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வரும் காலத்தில் கோவையில் கிடைக்கும் உயா் சிகிச்சைகள் ஈரோட்டில் கிடைக்கும்.
Advertisement
ஈரோடு பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காலிங்கராயன் இல்லத்திலிருந்து திண்டல் வரை மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு மேற்குத் தொகுதியில் மட்டும் 22 இடங்களில் பூங்கா அமைத்துக் கொடுத்துள்ளோம்.
சோலாா் அருகில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. கரோனா காரணமாக இதற்கான நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, கூரபாளையம் பகுதியைச் சோ்ந்த கொமதேகவினா் 100க்கும் மேற்பட்டோா் கே.வி.இராமலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.