முகப்பு
ஈரோடு

சொந்த கிராமத்தில் கே.ஏ.செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு

கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிநாள் என்பதால் அரசியல் கட்சித் தலைவா்கள், வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் 9ஆவது முறையாக போட்டியிடும் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினாா். வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

மேலும் நடந்து செல்ல முடியாத இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா். கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் சென்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்தங்களை நலம் விசாரித்து குழந்தைகளுடன் சுயபடம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.